• Aug 27 2025

திடீரென முடிவுக்கு வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல்...? வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல் தான் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'. அண்ணன் தம்பிகளுக்கு இடையே இருக்கும் பாசப்பிணைப்பை மையமாக கொண்டு இந்த சீரியல் அழகாக நகர்கின்றது. 

டி.ஆர்.பி ரேட்டிங்கில் கூட உச்சத்தில் இருந்து வந்த இந்த சீரியல் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்படுத்தும் வகையில் தற்போது சில நாட்களாக ஒளிபரப்பாகி வந்தது. அந்த வகையில் இந்த சீரியலில் கடந்த சில வாரங்களாக தனத்துக்கு கேன்சர் என்றும் அதற்கு உடனடியாக சிகிச்சை செய்ய வேண்டும் என்பது குறித்த காட்சிகள் ஒளிபரப்பாகி வந்தது.


இதனையடுத்து முல்லை, மீனா தனத்தை ஹாஸ்பிட்டலுக்கு  கூட்டி சென்று யாருக்கும் தெரியாமல் ஆபரேஷன் செய்து முடித்துள்ளனர். இருப்பினும் தற்போது கதிருக்கும் இந்த விடயம் தெரிந்து விட்டது.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தாங்கள் கட்டி வந்த புது வீட்டில் இருந்து ஒரு குரூப் போட்டோவை எடுத்து அதனை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றனர். இதனைப் பார்த்த ரசிகர்கள் "இது கிளைமாக்ஸ் போட்டோவா..?, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடியப்போகிறதா" என கவலையுடன் கேட்டு வருகின்றனர்.

இதோ அந்தப் புகைப்படம்..!


Advertisement

Advertisement