• Apr 17 2026

இனி எதுவுமே நடக்காது.. பங்க்ஷனில் குழந்தையை தூக்கிச் சென்ற ஈஸ்வரி! வீட்டை விட்டு வெளியேறும் ராஜி! பரபரப்பான திருப்பங்களுடன் Pandian Stores & Baakiyalakshmi

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. இந்த இரண்டு சீரியல் மெகா சங்கமும் என்ற பெயரில் ஒரு மணி நேரம் ஆக இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது. 

இந்த நிலையில், இந்த சீரியல்களில் இனி என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்...


பாக்கியலட்சுமி சீரியலில், ஈஸ்வரியும் செழியனும் ஜெனி வீட்டிற்கு சென்று, அங்கு இருக்கும் குழந்தையை எடுத்துக் கொண்டு, இங்க பெயர் வைக்கிற விழா நடக்காது என அங்கு வந்த விருந்தாளிகளுக்கு சொல்லுகிறார் ஈஸ்வரி. 


மேலும் ஜெனி வீட்டில் யாரும் இல்லை என தெரிந்தும் குழந்தையை தூக்கிக் கொண்டு வீட்டுக்குச் செல்கின்றார்கள்.


பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், ராஜி ஒரு மாதிரி இருக்க, நீ தான் இங்க இருக்க, உன் நினைப்பு எல்லாம் வேற எங்கையோ இருக்கு என ராதிகா சொல்ல, அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை சொல்லுகிறார்.


இதை தொடர்ந்து ராஜியின் அம்மா நகை பேக்கை கொண்டு வந்து கவனமாக வைக்குமாறு சொல்ல, அந்த நேரத்தில் கண்ணனும் வருகிறார்.


அப்போது ராஜி அந்த பேக்கை எடுக்க வேணாம் அதில் நகை இருக்கு என சொல்ல, ராஜிக்கு தெரியாமல் நகை சிலவற்றையும் எடுத்துக் கொண்டு ராஜியை அழைத்து செல்கிறார் கண்ணன்.


இது தான் தற்போது வெளியான ப்ரோமோ.. இனி ஜெனி வாழ்க்கையிலும், ராஜி வாழ்க்கையிலும் என்ன என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement