தமிழ் சினிமாவில் அடையாளமில்லாத கதைகளை எளிமையாகவும், உணர்வு பூர்வமாகவும் சொல்லும் இயக்குநர்கள் இன்று பாராட்டப்படுகின்றனர். அந்த வரிசையில், தற்போது அறிமுகமாகும் இயக்குநர் கார்த்திகேயன் மணி தனது முதலாவது படமான “மெட்ராஸ் மேட்னி” மூலம் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற விரைந்து வருகின்றார்.
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பதுடன், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும் இப்படத்தினை ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியிடுவதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் எதார்த்த கதைக்களத்தை மையமாகக் கொண்டது. ஒரு சாதாரண மிடில் கிளாஸ் மனிதனின் வாழ்க்கையில், சந்தோஷம், வருத்தம், நம்பிக்கை இவை அனைத்தும் எங்கே ஒளிந்திருக்கின்றன என்பதைத் தேடும் ஒரு வாழ்க்கைப் பயணத்தை கதையாகக் கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் முதல் பாடல் மே 19ம் திகதி வெளியாகவிருக்கிறது. இதன் சிறப்பான அம்சம் என்னவென்றால் வைகை புயல் வடிவேலு தான் இந்த பாடலை பாடியுள்ளார். விமர்சனங்கள், காமெடி உணர்வு இவற்றில் வல்லவரான வடிவேலுவின் குரலில் ஒரு பாடல் வருவது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது குரலும், உணர்ச்சி பூர்வமான வரிகளும் சேர்ந்து, பாடல் நிச்சயமாக ஒரு நெஞ்சை நெகிழ வைக்கின்ற வகையில் இருக்கும் என எதிர்பார்த்துள்ளனர்.
மெட்ராஸ் மேட்னி திரைப்படம் ஒரு சின்ன கதையாக இருந்தாலும், அதன் பின்னணி வேலை, தொழில்நுட்ப தரம் மற்றும் ஒவ்வொரு பிரிவின் சிறப்பான பங்களிப்பால், இது ஒரு விழிப்புணர்வூட்டும் சினிமாவாக உருவெடுத்துள்ளது.
இப்படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், முதல் பாடல் மே 19-ம் திகதி வெளியாகும் என்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது.
Listen News!