• Aug 08 2025

தியட்டரைக் கொளுத்துவோம்..! – "தக் லைஃப்" படத்தை தடுக்கும் நாராயண கவுடா..!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படம் குறித்து தற்போது கர்நாடக மாநிலத்தில் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. இவர் சமீபத்தில் கூறிய கருத்துக்கள், குறிப்பாக “தமிழ் மொழியின் ஆதிமூலம் கன்னடம்” என்ற உரை, தற்போது அரசியலில் மட்டுமல்லாமல் கலாச்சார ரீதியிலும் கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், கன்னட அமைப்பான ‘கர்நாட ரக்ஷண வேதிகே’ சார்பில் தலைவர் நாராயண கவுடா தற்பொழுது ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அவரது அதிரடி பேச்சு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாராயண கவுடா கூறியதாவது, “தமிழ் நடிகர் கமல்ஹாசன், கடந்த சில தினங்களுக்கு முன்பு, தமிழ் மொழியில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என கருத்தை வெளியிட்டுள்ளார். இது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. கன்னட மக்களின் பெருமையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் அவர் பேசியிருக்கிறார்.” என்றார்.

அத்துடன், “ அவர் நடித்து வரும் ‘தக் லைஃப்’ என்ற திரைப்படம் கர்நாடக திரையரங்குகளில் வெளியாவும் நிலை உருவாகி வருகின்றது. இது நடந்தால், நாம் அமைதியாக இருக்கமாட்டோம். அந்தப் படத்தை திரையிட முயற்சிக்கும் தியட்டரை நாங்கள் கொளுத்தவும் தயங்கமாட்டோம்!” எனவும் தெரிவித்துள்ளார்.


பல கன்னட அமைப்புகள், சமூக வலைத்தளங்களில் ஹாஷ்டாக் மூலம் #BanThugLifeInKarnataka என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். இது ஒரு மாநிலத்தில் திரைப்படத்திற்கு எதிராக வளர்ந்துவரும் அமைப்பாக வலுப்பெற்று வருகின்றது.


Advertisement

Advertisement