• May 16 2026

புருஷன் விட்டுட்டு ஓடிட்டாரு, நான் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணல..! ரேஷ்மா பசுபுலேட்டி உருக்கம்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அளவற்ற அன்பையும் வரவேற்பையும் பெற்றவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. 

இவர் விஷ்ணு விஷால் நடித்த வேலன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிலும் கவனம் பெற்றார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், தற்போது சின்னத்திரையில் தொடர்ந்து நடித்து வருவதோடு, சமூக வலைதளங்களிலும் ஆர்வமாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் ரேஷ்மா தன் தனிப்பட்ட வாழ்க்கையின் வலிமிகுந்த உண்மைகளை மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.


அதில் அவர் கூறுகையில், தன் கணவர் ஒரு பாக்ஸர் என்றும், தான் கர்ப்பமாக இருந்த தருணத்தில் அவர் தன்னை தாக்கியதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளிட்டுள்ளார். 

அந்த தாக்குதலின் விளைவாக வயிற்றில் நான்கு மாதமே நிறைவடைந்திருந்த குழந்தை தவணைக்கு முன்பே பிறந்து  விட்டதாக தெரிவித்தார்.

இந்த சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர், தன்னை விட்டு ஓடிவிட்டதாகவும், அதன் பின்னர் குழந்தை ஒன்பது மாதங்களுக்கும் மேலாக இன்குபேட்டரில் வாழ்க்கைக்காக போராடியதாகவும் ரேஷ்மா உருக்கமாக கூறினார்.

மேலும் நீங்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்திருக்கிறீர்களா என்ற கேள்விக்கு நான் ஒருபோதும் அதுபோன்ற விஷயங்களை செய்யவில்லை அப்படி செய்திருந்தால் இன்று நான் வேறுெங்கோ இருந்திருப்பேன் என்றார்,

இந்த வார்த்தைகள் பலருக்கும் உத்வேகமளிப்பதாக இருக்கின்றன. வாழ்க்கையின் கொடுமையான சோதனைகளையும் தனிமையையும் தாண்டி, தன் திறமையை மட்டுமே நம்பி முன்னேறிய ரேஷ்மாவின் வலிமையான பயணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று வருகிறது.

Advertisement

Advertisement