• May 16 2026

அடுத்தடுத்து உடைந்த உண்மைகள்..? அசிங்கப்பட்ட அண்ணாமலை! ஹரிணியின் இறுதி முடிவு

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஹரிணியின் பெற்றோர் அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்துகின்றனர். மேலும், ஹரிணி ரோகினியை சந்தித்த விஷயத்தையும் கூறுகிறார். அந்த சந்திப்பின் போது, ரோகினி மனோஜ் மீது உண்மையான காதல் வைத்திருப்பதாகவும், அவருடன் சேர்ந்து வாழ்வது தான் உங்களுக்கு சரியென மனோஜுக்கு சொல்லுகிறார்.

இதையடுத்து, ஹரிணியும் அவரது பெற்றோரும் அண்ணாமலையிடம், “நீங்களும் உண்மையை மறைத்து விட்டிர்கள். நீங்க எல்லாம் பெரிய மனுஷனா.?” எனக் கண்டித்துப் பேசுகின்றனர். இறுதியில், அவர்கள் நிச்சயதார்த்த மோதிரத்தை எடுத்துவிட்டு வெளியேறுகின்றனர்.

அதே நேரத்தில், ஸ்வேதா “உண்மையை முன்பே சொல்லியிருந்தால், நான் அவர்களிடம் பேசி ஆறு மாதம் நேரம் கேட்டிருப்பேன். ஆனால் இப்படி ஏமாற்றிவிட்டீர்கள்” என்று விஜயாவிடம் கோபமாகக் கூறிவிட்டு செல்கிறார்.


இதன் பின்னர், அண்ணாமலை “எதற்காக உண்மையை மறைத்தாய்? நீ திருந்தவே மாட்டாயா? இத்தனை நாள் சேர்த்து வைத்த நல்ல பெயர் ஒரு நிமிடத்தில் போய்விட்டது” என்று விஜயாவை திட்டி, அடிக்க முயல்கிறார். ஆனால் முத்து அதை தடுத்து நிறுத்துகிறார்.

இறுதியில், ரோகினியின் காதல் குறித்து முத்து மீனாவிடம் பேசுகிறார். “அவர் என்ன செய்திருந்தாலும் உண்மையாகவே மனோஜை காதலித்திருக்கிறார். அம்மா செய்ததுக்கும் ரோகினி செய்ததுக்கும் வித்தியாசம் இல்லை” என அவர்கள் பேசிக்கொள்வதுடன் எபிசோடு முடிகிறது.

Advertisement

Advertisement