• May 16 2026

துஷாரா விஜயனுக்கு இப்படியொரு டாலண்ட் இருக்கா.? இணையத்தில் வைரலாகும் காணொளி

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வேகமாக முன்னேறி வரும் இளம் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் துஷாரா விஜயன். சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன், விக்ரமின் வீர தீர சூரன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் அவர் ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்றுள்ளார். 

குறிப்பாக சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவின் மனைவி மாரியம்மா கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்திய இயல்பான நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. 

அதேபோல் நட்சத்திரம் நகர்கிறது, அநீதி போன்ற படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து தனது திறமையை நிரூபித்துள்ளார்.


தற்போது பல புதிய படங்களை கைவசம் வைத்திருக்கும் துஷாரா விஜயன், சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக உள்ளார். 

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோ ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில் துஷாரா மிக நுணுக்கமாக படம் வரையும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள், “துஷாராவுக்கு நடிப்புக்கு அப்பாற்பட்ட இத்தனை திறமை இருக்கிறதா?” என்று ஆச்சரியமடைந்துள்ளனர். பலரும் அவரது ஓவியத் திறனை பாராட்டி வருவதுடன், அவர் ஒரு முழுமையான கலைஞர் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement