• May 17 2025

மொத்தக் குடும்பத்தையும் முட்டாள் ஆக்கிய விஜயா;ரொமான்ஸ் பண்ணிக் கூத்தடிக்கும் முத்து..!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, பார்வதி விஜயா கிட்ட மீனா எங்க நிக்கிறாள் நான் அவளப் பாக்கோணும் என்று சொல்லுறார். அதுக்கு விஜயா நீ என்னப் பாக்க வந்தியா இல்ல அவளப் பாக்க வந்தனியா என்று கோபமாகக் கேக்கிறார். அதுக்கு பார்வதி நீ அவளுக்கு அடிபட்டிருக்கு என்று சொன்னதற்குப் பிறகும் அவள பாக்காம போறது சரியில்ல என்று சொல்லுறார். இதனை அடுத்து பார்வதி மீனாவப் பாத்து ரோட்டில பாத்துப் போகத் தெரியாதோ என்று கேக்கிறார்.

அதுக்கு மீனா எனக்கு கையில அடிபட்டது கூட பரவாயில்ல அந்தப் பணம் சீதா சீட்டுப் போட்டு வைச்சிருந்த பணம் அத திருடிக் கொண்டு போனது தான் எனக்கு கவலையா இருக்கு என்கிறார். அதனை அடுத்து விஜயா பார்வதியப் பாத்து நல்லா விசாரிச்சிட்டியா என்று கேக்கிறார். அதுக்கு பார்வதி மீனாவ பார்க்கவே பாவமா இருக்கு என்று சொல்லுறார்.


அதைத் தொடர்ந்து பார்வதி மீனாவுக்கு தொழிலில போட்டியா இருக்கிற ஒரே ஆளு சிந்தாமணி தான் அவள் தான் பணத்த எடுத்திருப்பா என்று சொல்லுறார். மேலும் என்னதான் இருந்தாலும் நீ சிந்தாமணிக்கு இடம் கொடுக்காத என்று விஜயாவப் பாத்துச் சொல்லுறார். அத்துடன் சிந்தாமணி செய்யுற வேலைக்கெல்லாம் உனக்குத் தான் பாவம் கிடைக்கப்போகுது என்று சொல்லுறார்.

இதனை அடுத்து முத்து மீனாவோட பணம் திருட்டுப் போய்ட்டு என்று மண்டப ஓனருக்குச் சொல்லுறார். அதைக் கேட்ட ஓனர் சிந்தாமணி ஓடர் வாங்க காலையில இருந்து இங்கயே இருந்ததாகச் சொல்லுறார். அதைக் கேட்ட முத்து இதுக்கெல்லாம் சிந்தாமணி தான் காரணம் என்று சொல்லுறார். அதைத் தொடர்ந்து மீனாவும் முத்துவும் ரொமான்ஸ் பண்ணுறதப் பாத்த விஜயா கோபத்தில் கத்திக் கொண்டிருக்கிறார். இதைக் கேட்ட அண்ணாமலை அவங்க ரொமான்ஸ் பண்ணுறத பாத்து உனக்கு வயிறு எரியுதா என்று கேக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.



Advertisement

Advertisement