தமிழ் சினிமாவில் தன்னிச்சையான நடிப்பு பாணி, நேர்மையான பேச்சு, உணர்ச்சி மிகுந்த கதாபாத்திரங்களின் மூலமாக தனி இடம் பிடித்தவர் நடிகர் மன்சூர் அலிகான். சினிமா மட்டுமன்றி சமூக விடயங்களிலும் உருக்கமான கருத்துகளை வெளிப்படுத்தும் இவர், தற்போது அவரது மகன் துக்ளக் தொடர்பாக எழுந்துள்ள வழக்கு விவகாரம் காரணமாக மீண்டும் செய்தித்தாள்களின் தலைப்பாக மாறியுள்ளார்.
பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக, மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு எதிர்பாராத விதமாக உருவாகியதாகவும், தன் மகனை பழிவாங்க சிலர் முயற்சிக்கின்றனர் என்றும் மன்சூர் அலிகான் தற்பொழுது தெரிவித்து வருகிறார்.
செய்தியாளர்களை நேரில் சந்தித்த மன்சூர் அலிகான், "ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு, என்ன நடக்குது என தெரியாம வழக்கு பதிவு செய்ய சொல்வது நியாயமா? விசாரணை மேற்கொள்ளாமல், என் மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, எனது மகனுடன் பழகிய அனைவருக்கும் தெரியும், அவன் எப்படி பேசுவான் என்று.." எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும், தனது மகன் துக்ளக் முன்னதாக கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டான். அப்ப நானே என் மகனை அடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தேன். ஒரு தந்தையாக நான் செய்ய வேண்டியதைச் செய்தேன்! பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்." எனவும் கூறியிருந்தார். மன்சூர் அலிகானின் நேர்மையான உரை, சமூக வலைத்தளங்களில் பலரிடையே ஆதரவைப் பெற்றுவருகிறது.
Listen News!