• Aug 10 2025

'மோனிகா' பாடல் ஹிட் ஆனதுக்கு இப்டி ஒரு கிப்டா..? சோபின் ஷாஹிர் செய்த செயலை பாருங்களேன்..!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் கொண்ட படம் தான் 'கூலி'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தின் இசை அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. 


அந்தவகையில், சமீபத்தில் வெளியான இரண்டாவது சிங்கிள் பாடல் "மோனிகா.." ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. கவர்ச்சியும் கலையுமாக இருந்த இந்த பாடலில் நடிகை பூஜா ஹெக்டே, ஸ்டைலான நடனங்களுடன் அனைவரையும் கட்டிப்போட்டிருக்கிறார்.

அனிருத் இசையில் உருவான 'மோனிகா..' பாடல், முதலில் மென்மையாக ஆரம்பித்து, பின்னர் கிளாசிக் மாடர்னில் வித்தியாசமான ஸ்டைலில் அமைந்துள்ளது.

இந்த பாடலில், பூஜா ஹெக்டே தன் நடன திறமையை முழுமையாக வெளிப்படுத்தியிருந்தார். இந்த பாடல், வெளியான சில மணி நேரங்களிலேயே யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தது.


இந்த பாடலின் நடன இயக்குநராக இருந்தவர் தான் பிக்பாஸ் புகழ் சாண்டி மாஸ்டர். தனது signature steps மூலம் அவர் இப்பாடலுக்கு சிறப்பான நடன காட்சியை உருவாக்கியிருந்தார்.

இந்த பாடல் ஹிட்டானதைத் தொடர்ந்து,  நடிகர் சோபின் ஷாஹிர் என்பவர் சாண்டி மாஸ்டரை நேரில் சந்தித்தார். அதன்போது சாண்டி மாஸ்டரின் கலைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக முகத்தில் அன்புடன் ஒரு முத்தம் கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement