‘கூலி’ திரைப்பட புரொமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கின்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நேற்று கோயம்பத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அங்கு நிகழ்ச்சி முடிந்தபின், அவர் காருக்கு செல்லும் நேரத்தில் ஒரு சிறு குழந்தை, "லோகி மாமா! லவ் யூ.!" எனக் கியூட்டாக கூப்பிட்ட போது, அவர் அதற்குப் பதிலளித்த விதம் அனைவரையும் கவர்ந்தது. அந்த காட்சியின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.
அடுத்த மாதம் வெளியாகவுள்ள லோகேஷ் கனகராஜின் புதிய படம் “கூலி”, தமிழகத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் புரொமோஷன் பணிகள் தற்போது சிறப்புடன் நடைபெற்று வருகின்றன. இதில் இயக்குநர் லோகேஷ், ரசிகர்களிடம் நேரடியாக சென்று படம் குறித்து பேசும் விதமான சந்திப்புகளை நடத்தி வருகிறார்.

நேற்று (ஜூலை 28) கோயம்பத்தூரில் உள்ள ஒரு பிரபல திரையரங்கில் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு திரண்டிருந்த ரசிகர்கள், அவரை உற்சாகமாக வரவேற்றனர். நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும் போதே இந்நிகழ்வு நடந்துள்ளது.
Listen News!