• Jul 21 2025

தெறிக்கவைக்கும் First Look… திரைத்துறையை திரும்பிப் பார்க்க வைத்த ‘லோகா’!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

துல்கர் சல்மான், மலையாள திரையுலகில் மட்டுமல்லாமல், இந்திய திரைப்படங்களிலும் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை ஏற்படுத்தியவர். தனது நடிப்பு திறமையுடன் தயாரிப்பாளராகவும் கலக்கி வரும் துல்கர், தற்போது 'வெய் ஃபாரர் பிலிம்ஸ்' (Wayfarer Films) நிறுவனம் சார்பில், புதிய திரைப்படமான "லோகா"வை தயாரிக்கின்றார்.



இன்று இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. போஸ்டர் கற்பனைத் தோற்றங்களுடன், ஒரு திடமான பெண் கதாபாத்திரத்தை சுட்டிக்காட்டுகிறது. 



இதில் நடிக்கும் கல்யாணி பிரியதர்சன், அழகும், நுட்பமான நடிப்பும் கொண்ட ஒரு rising star. இவர் இந்த படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. துல்கர் சல்மான், ஒரே மாதிரியான  திரைப்படங்களைத் தேர்வு செய்வதில்லை. அவர் தயாரித்த “Salute” போன்ற படங்கள், நுட்பமான கதையமைப்பு, டெக்னிக்கல் excellence ஆகியவற்றால் பேசப்பட்டன. “லோகா” படமும் அதே பட்டியலில் சேரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

Advertisement

Advertisement