• Aug 14 2025

படத்துக்கு ரிவ்யூ கேட்க இப்புடியும் பண்ணலாமா.? அக்‌ஷய் குமார் செய்த செயலை நம்பவே முடியல..

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

பாலிவுட் நடிகர்களில் வெற்றிக்கொடி பறக்க வைத்திருப்பவர் அக்‌ஷய் குமார். ஆண்டுக்கு குறைந்தது 3 திரைப்படங்கள் நடித்து வரும் இவர், தற்போதைய சந்தையில் முன்னிலையில் உள்ளார். இவரது லேட்டஸ்ட் காமெடி படமான ‘ஹவுஸ்ஃபுல் 5’ ஜூன் 6ம் திகதி தியட்டரில் வெளியானது.


படம் ரிலீஸாகிய பின் அக்‌ஷய் குமார் செய்திருந்த செயல் ரசிகர்களையும், மீடியாவையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு நடிகர் தனது படம் மீதான ரசிகர்களின் கருத்துகளைத் தெரிந்துகொள்ள என்ன செய்ய முடியும்? என்று யோசித்த அவர், அதிரடியான முடிவொன்றினை எடுத்திருந்தார்.


பிரபல திரையரங்கத்தின் வாசலில், அக்‌ஷய் குமார் ஒரு சாதாரண ரசிகர் போல முகமூடி அணிந்து நின்றார். அவர் நடிகர் என்ற அடையாளமற்ற தோற்றத்தில், திரைப்படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களிடம் நேரடியாக பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.


அதன்போது, “இந்த ஹவுஸ்ஃபுல் 5 படம் எப்படி இருந்தது? நம்ம அக்‌ஷய் குமார் எப்படி நடித்தார்?” என்று கேட்டிருந்தார். அதற்கு ரசிகர்கள், "படம் சூப்பர்.! ஹீரோ நல்லா நடிச்சிருக்கார்..!" என்று பதிலளித்திருந்தனர். அத்துடன் அந்த ரசிகர்கள் யாரும் அக்‌ஷய் குமாரை அடையாளம் காணவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அக்‌ஷய் குமார் நடத்திய இந்த நிகழ்வு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. #AkshayKumar #Housefull5 #MaskSurprise என்கின்ற ஹாஷ்டாக்குடன் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகியுள்ளது.

Advertisement

Advertisement