• Aug 15 2025

அரசியலில் அடியெடுத்து வைத்த கஸ்தூரி பாஜக காட்சியில் இணைந்தார்!வைரலாகும் போட்டோஸ்...!

Roshika / 2 hours ago

Advertisement

Listen News!

பிரபல தமிழ் திரைப்பட நடிகை கஸ்தூரி, சென்னை கமலாலயத்தில் பாஜகவின் மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். பாஜகவின் உறுப்பினர் அட்டையும் கட்சியின் காவி துண்டையும் பெற்றுகொண்டு, கட்சியில் இணைந்ததாக அவர் தெரிவித்தார்.


சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் அரசின் செயல்களை கடுமையாக விமர்சித்து வந்த கஸ்தூரி, குறிப்பாக தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசையும் முதலமைச்சரையும் கடுமையாக விமர்சித்திருந்த அவர், தற்போது பாஜகவில் இணைந்தது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.


பாஜகவின் கலை, கலாச்சார பிரிவினருடன் இணைந்து, தன்னை கட்சியில் இணைத்துக்கொண்ட கஸ்தூரிக்கு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் பரப்புரை பொறுப்புகள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக வட்டாரங்கள் கூறுகையில், திரைத்துறையைச் சேர்ந்த மேலும் பல பிரபலங்களை கட்சியில் இணைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றும், கஸ்தூரி பாஜகவின் முக்கியமான பிரமுகராக தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement