இன்றைய பாணி உலகில் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் ஒன்றாக சேர்ந்தே கொண்டாடும் ஒரு பெயர் என்றால், அது ராஷ்மிகா மந்தனா தான். 'நேஷனல் க்ரஷ்' என ரசிகர்களால் அழைக்கப்படும் ராஷ்மிகா, 'அனிமல்', 'புஷ்பா 2', 'சாவா' ஆகிய பான் இந்திய ஹிட் படங்களுக்குப் பிறகு, இயக்குநர் அட்லீ – நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் அடுத்த பெரிய படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் தற்போது திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ராஷ்மிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களில் பாரம்பரிய உடையில் காட்சியளிக்கும் ராஷ்மிகாவின் தோற்றம், இணையத்தை அலறவைத்துவிட்டது.
ராஷ்மிகா அணிந்திருந்த நகைகள், சுருளும் தோள்பட்டையும், பாரம்பரிய மெட்டும் எல்லாம் கூட, அந்த பாரம்பரிய ஆடையின் அழகை இன்னும் உயர்த்துகின்றன. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் ராஷ்மிகாவின் இந்த புது லுக் குறித்து புகழ்வோடு பேசி வருகின்றனர். கலாச்சாரத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் இந்த முயற்சி, அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Listen News!