நடிகர் மற்றும் இயக்குநராக மட்டுமல்லாமல், சமூக சேவையாளராகவும் அனைவரின் மனங்களில் இடம்பிடித்தவர் ராகவா லாரன்ஸ். தன்னார்வ சமூக சேவைகளில் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும் அவர், தற்போது மேற்கொண்ட ஒரு செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
சென்னை ரயில்களில் ஸ்வீட் (இனிப்பு) விற்பனை செய்து வருகிறார் ஒரு வயதான நபர். தனது வயதையும் பொருட்படுத்தாமல், தனது வாழ்வாதாரத்திற்காக மதிப்புடன் உழைத்து வருகிறார். இவரது நிலையை அறிந்த லாரன்ஸ், அவருக்கு ரூ.1 லட்சம் உதவி செய்ய இருப்பதாக தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், அந்த நபரை யாராவது ரயிலில் சந்திக்கின்றீர்கள் என்றால், அவரிடம் இருந்து ஒரு இனிப்பு வாங்கி ஆதரவு தருமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார். “அவரை கண்டால், ஒரு ஸ்வீட்டை வாங்கி உதவுங்கள். நாம் சிறிய உதவியினால் ஒருவர் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்,” என லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
இது போல பலருக்கும் கல்வி, சிகிச்சை, அடிப்படை தேவைகளுக்காக தொடர்ந்து உதவிகள் செய்து வரும் லாரன்ஸ், திரை உலகத்தை தாண்டி உண்மையான நாயகனாக மாறி வருகிறார். அவரது இந்த மனிதநேய செயல், சமூகத்தில் பலருக்கும் உத்வேகமாக அமைந்திருக்கிறது.
Listen News!