இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு , மலையாளம் , கன்னடம் எனப் பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது அழகு, நடிப்பு திறமை, மற்றும் நடனப்பாடல்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றவர். தற்போது சோப் விளம்பரத் தூதுவராக நியமனம் பெற்ற செய்தி சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றது.
மேலும் இரண்டு ஆண்டுக்கு 6.2 கோடி சம்பளம் கொடுப்பதற்கு தீர்மானிக்கபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் அந்த மாநில நடிகைகளை நியமிக்காமல் வெளிமாநில நடிகையை நியமிப்பது பற்றி சில சர்ச்சைகளும் எழுந்துள்ளன.
அதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக அந்த மாநில அரசு ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதாவது தமன்னாவின் நியமனம், மைசூர் சாண்டல் சோப் பிராண்டின் உலகளாவிய மார்க்கெட்டிங் முயற்சிகளின் ஒரு பகுதி எனவும். இந்நிறுவனத்தின் பிரபலத்தை அதிகரிக்கவும் வலுப்படுத்துவதற்காக தமன்னா என்னும்பிரபலத்தை பயன்படுத்தியுள்ளதாகவும் , இளம் தலைமுறையினரிடையே பிராண்டின், பிரபலத்தை அதிகரிப்பதற்காவும் தமன்னாவை கர்நாடக மாநில விளம்பரத் தூதுவராக நியமித்துள்ளார்கள். இத்தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதுடன் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!