• Sep 14 2025

கிளாமர் லுக்கில் தாறுமாறாக போஸ் கொடுத்த ஜனனி..! வைரலான போட்டோவால் ரசிகர்கள் ஷாக்.!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

பிரபலமான சீரியல் நடிகையாக திகழும் ஜனனி, தற்போது தனது புதிய போட்டோஷூட்டால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். 'செம்பருத்தி' மூலம் ரசிகர்களின் மனதில் பதிந்த இவர், இதனை அடுத்து 'இதயம்' சீரியலில் தனது நுணுக்கமான நடிப்பால் மீண்டும் அனைவரையும் ஈர்த்திருந்தார்.


தற்போது, சமூக ஊடகங்களில் வெளியான அவரது புதிய கிளாமர் லுக் புகைப்படங்கள், ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. அந்த புகைப்படங்களில், ஜனனி அணிந்திருந்த ஆடையின் வித்தியாசமான வடிவமைப்பும், துணிச்சலான லுக்கும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


ஜனனி அணிந்திருந்த டிரஸ்ஸின் ஸ்டைல் தான் இந்த ஃபோட்டோஷூட்டின் ஹைலைட். பக்கமாக கிழிக்கப்பட்டது போல தோன்றும் அந்த வடிவமைப்பு, அவருடைய ஸ்டைலிஷ் தோற்றத்தையும், நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது.


புகைப்படங்கள் வெளியான சில நிமிடங்களிலேயே, சமூக ஊடகங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராம், டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற இடங்களில் அதிகளவான கமெண்ட்ஸினைப் பெற்றுள்ளது. வைரலான போட்டோஸ் இதோ..!!


Advertisement

Advertisement