• May 21 2025

ஜாக்கி சான் come back..! புதிய படத்துடன் மாஸாக களத்தில் இறங்கிய சூப்பர் ஹீரோ..!

subiththira / 6 hours ago

Advertisement

Listen News!

உலக சினிமாவில் தற்காப்புக் கலையின் மன்னனாக வலம் வரும் ஜாக்கி சான், தனது புதிய திரைப்படமான ‘கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்’ படத்தின் பிரச்சார வேலைகளுக்காக லண்டன் சென்றுள்ளார். அங்கு அவரைப் பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர்.


ஜாக்கி சான் நடித்துள்ள இந்தப் படம், தற்காப்புக் கலையை முன்னிலைப்படுத்தும் படமாக உருவாகியுள்ளது. “இது ஒரு ஆக்‌ஷன் படம் கிடையாது. குழந்தைகளும், பெற்றோர்களும் ஒன்றாக அமர்ந்து பார்ப்பதற்கான நல்ல உரையாடல்களுடன் கூடிய திரைப்படம்,” என்றார் ஜாக்கி சான்.

இது 1984-ம் ஆண்டு வெளியாகி உலகளவில் ஹிட் அடித்த 'கராத்தே கிட்' தொடரின் ஆன்மா வடிவமாக அமைந்துள்ளது. கடந்த வருடத்திலிருந்து படப்பிடிப்புகள் தொடங்கி தற்போது ரிலீஸிற்குத் தயாராக உள்ளது.


ஊடக சந்திப்பில் பேசிய ஜாக்கி சான், "தற்காப்புக் கலையை வெறும் சண்டைக்கலை என்றால் அது தவறு. இது ஒவ்வொரு மனிதனுக்கும் நற்குணத்தை வளர்க்கும் ஒரு வாழ்வியல் முறையாக இருக்க வேண்டும். அதனால் தான் இந்தப் படத்தில் நாங்கள் உணர்வுகளை அதிகமாக கொண்டு வந்துள்ளோம். இது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் தத்துவம் போன்ற பார்வையைத் தரும்." என்றார்.

அதேநேரம் அவர் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் 'ஜாக்கி சான் ஓய்வுக்கு சென்றுவிட்டாரா?' என்ற வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருந்தார். மேலும், "நான் இப்போது தான் மீண்டும் பிறந்த மாதிரி இருக்கிறது. இந்த படம் எனக்கு புது உயிர் கொடுத்தது," என்றார் ஜாக்கி சான். 

ஜாக்கி சானின் புதிய முயற்சி ‘கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்’ என்பது சாதாரண சண்டைப் படம் அல்ல. இது மனித உணர்வுகளையும், வாழ்க்கை நெறிகளையும் கொண்டு நடத்தும் ஒரு பயணம். ரசிகர்கள் மட்டுமல்லாமல், பெற்றோர்களும் குழந்தைகளுடன் அமர்ந்து பார்க்கும் வகையில் அமைந்துள்ள இப்படத்தில், "ஜாக்கி சான் கம்பேக்" கொடுத்துள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர்.

Advertisement

Advertisement