• May 22 2025

ரவியை வலுக்கட்டாயமாக இழுத்து வைக்கமுடியாது..! விவாகரத்து குறித்து பிரபலம் தெரிவித்த உண்மை!

subiththira / 8 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல பெயரைப் பெற்று, குடும்பத்தின் முன்னோடியாக காணப்படும் நடிகர் ஜெயம் ரவி தற்போது, தனது மனைவி ஆர்த்தியுடன் பிரிந்திருக்கிறார் என்ற விவகாரம் கடந்த சில வாரங்களாகவே மீடியா மற்றும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.


இந்நிலையில், இது நீதிமன்றத்தில் வழக்காக மாறி தற்போது குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இவ்விவகாரம் குறித்து பேசியுள்ள பிரபல சமூக விமர்சகரான செய்யாறு பாலு தற்போது தனது கருத்துக்களை மிகத் திறமையாகப் பகிர்ந்துள்ளார்.

செய்யாறு பாலு கூறுகையில், “ஜெயம் ரவி தரப்பிலிருந்தும், ஆர்த்தி தரப்பிலிருந்தும் அறிக்கைகள் வந்துகொண்டே இருக்கின்றன. இறுதியில், உண்மை என்ன என்பதே புரியவில்லை. ஒரு நடிகரின் வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கலாம்... ஆனால் மீடியா ஏன் இந்தப் பிரச்னையை இப்படிக் கொண்டு போகிறது..?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.


மேலும், “இந்தப் பிரச்சனை ஐசரி கணேஸின் மகளின் திருமணத்தோடு தான் புது பரிணாமம் அடைந்தது. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இந்த விவகாரம் சூடேற்றப்பட்டது.” என திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தற்போது Courtக்கு சென்றுள்ள நிலையில், வழக்கு ஜூன் 12ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனத் தெரிய வந்துள்ளது. 

அத்துடன் செய்யாறு பாலு, “ஆர்த்தி, ஜெயம் ரவியிடம் ஒவ்வொரு மாதமும் ரூ.40 லட்சம் கொடுக்க சொல்லியிருக்கிறாங்க. இது வருடத்திற்கு மூன்று கோடிக்கு மேல தான் வருது. இது சாதாரண விஷயமா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், யாரையும் வலுக்கட்டாயமாக இழுத்து வைக்க முடியாது எனவும் கூறியிருந்தார்.

இது போன்ற கோரிக்கைகள் வெளியாகும் போது, ஒரு நடிகரின் நடிப்பு வாழ்க்கையையே கேள்விக்குறியாக மாற்றும் என்பதையும் அவர் கவலையுடன் கூறியுள்ளார். “ஒரு நடிகருக்கு ஒரு சர்ச்சை வந்தா, அது அவருடைய திரைவாழ்க்கைக்கு கரும்புள்ளியாக மாறிவிடும். அதை ஏன் ஒருவரும் புரிந்து கொள்ள மாட்டேங்கிறாங்க?” எனவும் வலியுறுத்தினார்.


Advertisement

Advertisement