• Jun 26 2026

ரஜினியின் 'தர்மன்' படம் ஹாலிவுட் ரீமேக்கா? அஸ்வத் மாரிமுத்து கொடுத்த அதிரடி விளக்கம்.!

shali / 2 hours ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173வது திரைப்படமாக உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படம் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்திக்கு இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து நேரடியாக விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


இந்நிலையில், பிரபல ஹாலிவுட் வெப்சீரிஸான 'Good Doctor' தொடரின் ரீமேக் உரிமையை ராஜ்கமல் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும், அதனை அடிப்படையாகக் கொண்டு 'தர்மன்' உருவாகி வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இது முற்றிலும் பொய்யான தகவல். இப்படிப்பட்ட வதந்திகளை நம்ப வேண்டாம்" என்று தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம் 'தர்மன்' எந்த வெளிநாட்டு வெப்சீரிஸின் ரீமேக்கும் அல்ல என்பது உறுதியாகியுள்ளது.

இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் சிம்ரன் மற்றும் ராஷி கன்னா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளும் திட்டமிட்டபடி நிறைவடைந்தால், அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீட்டை இலக்காகக் கொண்டு 'தர்மன்' ரசிகர்களை திரையரங்குகளில் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement