தமிழ் சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் அளித்து வித்தியாசமான திரைப்படங்களைத் தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் விக்ரம் பிரபு, தனது அடுத்த படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தயாராகியுள்ளார்.
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு, கும்கி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி முதல் படத்திலேயே பாராட்டுகளை பெற்றார்.
அதன் பிறகு இவன் வேற மாதிரி, சிகரம் தொடு, டாணாக்காரன், சிறை உள்ளிட்ட பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து தனது தனித்துவமான நடிப்பை நிரூபித்தார்.
குறிப்பாக சமீபத்தில் வெளியான சிறை திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. அதன் பின்னர் பல இயக்குநர்களிடம் கதைகள் கேட்டிருந்தாலும், எந்த புதிய திட்டத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் அமைதியாக இருந்தார்.

இந்நிலையில், அவரது 26வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மீண்டும் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைவதில் மிகுந்த மகிழ்ச்சி இருப்பதாக விக்ரம் பிரபுவும் தெரிவித்துள்ளார்.
படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் தேர்வு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், படப்பிடிப்பை ஒரே கட்டமாக நிறைவு செய்து விரைவாக ரசிகர்களிடம் கொண்டு வரவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்புடன் வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்தான் தற்போது அதிகம் பேசப்படுகிறது. உருகிக் கொண்டிருக்கும் தங்கக் கட்டியிலிருந்து ரத்தம் கலந்த கால்தடங்கள் வெளிப்படுவது போன்ற மர்மமான காட்சியமைப்பு ரசிகர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த போஸ்டர், படம் எந்த வகையான கதையைச் சொல்லப் போகிறது என்ற ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
படத்தின் பெயர், கதைக்களம், நடிகர்கள் உள்ளிட்ட மேலும் பல முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளதால், விக்ரம் பிரபுவின் இந்த புதிய முயற்சி ரசிகர்களிடையே ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
Here we go with a bloody tale 💥
Romeo Pictures presents #VikramPrabhu26
produced by @mynameisraahul @Romeopictures_
So excited to work with my dear brother again @thisisysr @U1Records 🔥
Direction @just_sid_here pic.twitter.com/CULiIMUGX8
Listen News!