• Jun 26 2026

த்ரிஷா வந்தாச்சு... அப்போ விஜய்? குஷ்பு மகள் திருமண போட்டோக்கள் வைரல்..

shali / 2 hours ago

Advertisement

Listen News!

குஷ்பு மற்றும் சுந்தர். C தம்பதியின் மூத்த மகளான அவந்திகாவுக்கு, ஷ்ரவன் சீனிவாசனுடன் கோவாவில் உள்ள ஆடம்பர ரிசார்ட்டில் நேற்று (ஜூன் 25) குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. 

காதலித்து வந்த இருவரின் உறவுக்கும் இரு குடும்பங்களும் முழு சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த திருமணம் கோலாகலமாக நடந்தது. விரைவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


திருமண விழாவில் திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்று மணமக்களை நேரில் வாழ்த்தினர். குறிப்பாக த்ரிஷா கலந்துகொண்டது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் ராதிகா சரத்குமார், நாகார்ஜுனா , சுபாஷினி , பூர்ணிமா பாக்யராஜ், சிரஞ்சீவி  மற்றும் வெங்கடேஷ் உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.

குஷ்புவின் மூத்த மகளான அவந்திகா ஏற்கனவே மலையாளத்தில் அறிமுகமாகி, தற்போது தமிழிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இளைய மகள் அனந்திதா படைப்புத் துறையில் கிரியேட்டிவ் புரொட்யூசராக செயல்பட்டு வருகிறார். 

குடும்பத்தினரின் மகிழ்ச்சியான தருணமாக அமைந்த இந்த திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி ரசிகர்களின் வாழ்த்துகளை பெற்று வருகின்றன.


Advertisement

Advertisement