2019 ஆம் ஆண்டு ஹிருத்திக் ரோஷன் - டைகர் ஷெரா நடிப்பில் வெளியான 'வார்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. இந்த படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சாதனையை படைத்திருந்தது.
இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை தற்போது அயன் முகர்ஜி இயக்கி உள்ளார். இதன் முதல் பாகத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்தது போலவே இரண்டாவது பாகத்திலும் நடித்துள்ளார். அவருடன் பாலிவுட்டில் பிரபல நடிகர் ஆன ஜீனியர் என்டிஆரும் நடித்துள்ளார். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்னொரு பக்கம் லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சத்தியராஜ் போன்ற முக்கிய பெரும் நடிகர் பட்டாளங்களின் நடிப்பில் கூலி திரைப்படம் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த இரண்டு படங்களுமே இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளன.
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது திரைப்பயணத்தில் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு பலரும் வாழ்த்தி வரும் நிலையில் ஹிருத்திக் ரோஷனும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அதன்படி அவர் கூறுகையில், நான் ஒரு நடிகராக என்னுடைய முதல் அடிகளை உங்களுடன் தான் எடுத்து வைத்தேன். எனது முதல் ஆசிரியர்களில் ஒருவர் நீங்கள் தான். ரஜினி சார், எங்களுக்கு நிலையான உத்வேகமாக தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளதோடு, திரைத்துறையில் 50 ஆண்டுகள் மேஜிக்கை நிறைவு செய்ததிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து பதிவிட்டுள்ளார் ஹிருத்திக் ரோஷன். தற்போது அவருடைய பதிவு சமூக வலைத்தள பக்கங்களில் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
இதேவேளை, இவர்கள் இருவரும் 1986-ம் ஆண்டு வெளியான 'பகவான் தாதா' என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் குழந்தை நட்சத்திரமாக ரஜினியின் வளர்ப்பு மகனாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!