• Sep 12 2025

‘கூலி’ சான்றிதழ் சர்ச்சை....!சென்சார் போர்டுக்கு ஹை கோர்ட் அதிரடி நோட்டீஸ்...!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம் கடந்த வியாழக்கிழமை உலகம் முழுவதும் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம், முதல் வாரத்தில் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து புதிய சாதனை புரிந்துள்ளது.


ஆனால், இந்த படத்திற்கு சென்சார் போர்டு A சான்றிதழ் வழங்கியிருப்பது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. இதில் அதிகமான வன்முறை காட்சிகள் இருப்பதாக தெரிவித்து A சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால், பெண்கள் தங்களது பிள்ளைகளுடன் படம் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, ‘கூலி’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கும் வகையில் அனுமதி அளிக்க வேண்டும் என சன் பிக்சர்ஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், “KGF மற்றும் பீஸ்ட் போன்ற படங்களிலும் அதிக வன்முறை இருந்தபோதிலும், அவற்றிற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டது” எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சென்சார் போர்டுயை பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. ‘கூலி’ திரைப்படம் தொடர்பான சென்சார் சான்றிதழ் விவகாரம் திரைப்படத் துறையிலும் ரசிகர்களிடையும் பெரும் கவனம் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement