• Apr 27 2025

‘கூலி’ படக்குழுவுடன் சரக்கு பார்ட்டியில் ஸ்ருதிஹாசன்... வெளியான தகவல் இதோ!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

சினிமா ரசிகர்களுக்கிடையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘கூலி’ . இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க்கின்ற ஸ்ருதிஹாசன் மற்றும் மலையாள நடிகர் செளபின் ஷாகிர் பார்டியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. 

தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் குழுவின் தகவலின்படி, ‘கூலி’ ஒரு மிகப்பெரிய ஆக்ஷன், திரில்லர் மற்றும் திருட்டுத் தொடர்பான கதை என்று கூறப்படுகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சூப்பர்ஸ்டார் மற்றும் பல பிரபல நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.


இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதுடன் இதில் ஸ்ருதிஹாசன் முக்கியமான வேடத்தில் நடித்து வருகின்றார். மேலும் அவருடன் இணைந்து மலையாளத்தின் பிரபல நடிகர் செளபின் ஷாகிர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

சமீபத்தில் படப்பிடிப்பின்போது நடைபெற்ற பார்டியில், நடிகை ஸ்ருதிஹாசன், செளபின் ஷாகிர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அந்தப் பார்டியில் ஸ்ருதிஹாசன் கையில் சரக்கு பாட்டிலுடன் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதும் வைரலாகி வருகின்றது. ரசிகர்கள் அந்த புகைப்படங்களை பார்த்து  ஸ்ருதிஹாசனா இப்படி செய்வது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement