• Jul 18 2025

பாட்ஷாவாகவே வாழ்ந்திருக்கீங்க..! பாட்ஷா ரீ-ரிலீஸானதை பார்த்த இயக்குநர் ஓபன்டாக்.!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாட்ஷா திரைப்படம், தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத தடங்களை பதித்தது. அதற்கேற்ப அந்தப் படத்தின் வசனங்கள், சினிமா வசூல் சாதனை மற்றும் பின்னணி இசை என அனைத்தையும் ரசிகர்கள் சிறப்பாக வரவேற்றனர்.


இந்நிலையில் 2025-ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி, அந்த Cult Classic படமான பாட்ஷா மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.


தற்பொழுது, பாட்ஷா படத்தை இயக்கிய இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, இந்நிகழ்வை பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவினை எழுதியுள்ளார். 

அந்த பதிவில் அவர், "பாட்ஷா திரைப்படம் உங்களால் தான் ரஜினி சார். உங்களின் அசத்தலான நடிப்பும், திரையில் நீங்கள் தோன்றிய விதமும்... பாட்ஷாவாக நடிக்கவில்லை, வாழ்ந்துள்ளீர்கள். cult classic-ஆன பாட்ஷா சினிமா வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்." என்றார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement