தமிழ் சினிமா உலகில் தற்போது மிகப்பெரிய பரபரப்பை உருவாக்கி இருக்கும் விவகாரமாக, நடிகர் ரவிமோகன் – ஆர்த்தி விவாகரத்து மற்றும் அதற்குக் காரணமாகக் கூறப்படும் கென்யா வம்சாவளிப் பாடகி கெனிஷா குறித்த தகவல்கள் காணப்படுகின்றன. சமூக வலைத்தளங்கள் மட்டுமல்ல, சினிமா வட்டாரங்களிலும் மிகுந்த விவாதத்துக்குள்ளான இந்த விவகாரம் குறித்து, தற்போது கெனிஷா தானே நேரடியாக மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் யார்? இவரது பின்னணி என்ன? உண்மையில் ரவிமோகனுடன் உள்ள உறவு எப்படி உருவானது? சமூக வலைத்தளங்களில் சாட்டப்படும் விமர்சனங்களுக்கு அவர் என்ன பதிலளிக்கிறார்? என்பவற்றை விரிவாக இங்கே பார்க்கலாம்.
கெனிஷா ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு தமிழ் தந்தைக்கும், ஆபிரிக்க நாட்டுத் தாய்க்கும் பிறந்தவர். அவரது பிறப்பிடம் கென்யா. தாயின் மரணம் மற்றும் தந்தையின் மனநலம் பாதிக்கப்பட்ட நிலை காரணமாக, குடும்ப வாழ்க்கை மிகவும் சிக்கலானதாகவே தொடங்கியது. இந்த நிலைதான் அவரை "சைக்காலஜி" படிக்கத் தூண்டியது.
இவர் பின்னர் லண்டனில் படித்து, இசையில் ஆர்வம் வளர, சர்வதேச அளவில் பாடல்களை வெளியிட்டு பரிசுகளை வென்ற இசைக் கலைஞராக உருவெடுத்தார். அதே சமயம், அவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான ரீல்ஸ் வீடியோக்களாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
கெனிஷா வெளியிட்ட பல பாடல்களும் அவரது ஆடைகளும், இளைஞர்களிடையே பிரபலம் பெற்றாலும் சிலரிடையே 'அசிங்கமானது',என்ற விமர்சனங்களையும் பெற்றது. ஆனால் கெனிஷா எப்போதும் ஓர் இசைக் கலைஞரின் பார்வையில் தான் தன்னை முன்னிலைப்படுத்தினார்.
இன்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் முக்கிய கட்டம், ரவிமோகன் மற்றும் கெனிஷா இடையிலான நெருக்கம் எப்படி உருவானது என்பதே. கெனிஷா வெளியிட்ட ஒரு பாடலின் இசை வெளியீட்டு விழா கடந்த ஆண்டு சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது. அப்போது நடிகர் ரவிமோகன் அதில் கலந்து கொண்டார். அதுவே அவர்களுக்கிடையே நட்பாகத் தொடங்கிய உறவை காதலாக மாற்றியதாகக் கூறப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து, ரவிமோகன் தனது மனைவி ஆர்த்தியைவிட்டு வெளியேறி, சர்ச்சைகளைத் தூண்டினார். ரவிமோகன், தனது இன்ஸ்டாகிராமில் "மரியாதையுடன் பிரிந்தோம்" என தெரிவித்த பிறகு, அவரிடம் இருந்து வெளிவந்த ஒரு அறிக்கை அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
“என்னை ‘ஜெயம் ரவி' என்று அழைக்க வேண்டாம்.” என அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். இதன் பின்னணியில், கெனிஷா, ரவியை “ஜெயம்” என செல்லமாக அழைத்திருந்ததாக செய்திகள் வெளியானது. இதனால் தான் அப்படி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்ச்சிபூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது, "உங்களுக்குத் எனது வலிகளையும் உண்மையையும் சுட்டிக்காட்ட முடியாது. ஆனால் ஒரு நாள் உங்களுக்கு எனது உண்மை தெரியவரும். நான் தவறு செய்திருந்தால், சட்டத்தால் தண்டிக்கப்படுவதை மகிழ்ச்சியுடன் ஏற்கின்றேன்." என்றார். மேலும் எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். நான் தவறு செய்திருந்தால் கடவுள் என்னை எரிக்கட்டும் எனவும் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து, “நான் எந்தக் கமெண்ட்ஸையும் OFF பண்ணமாட்டேன். ஓடி ஒழியவும் மாட்டேன். யாரிடமும் மறைக்க எதுவும் இல்லை. கேள்வி கேட்பவர்கள் என் முகத்துக்கு முன்னாடி கேட்கலாம். நான் பதில் சொல்ல ready." எனவும் தெரிவித்தார். இத்தகவல்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றன.
Listen News!