தமிழ் சினிமாவின் தயாரிப்புத் துறையில் பல்வேறு தரப்புக்களை அனுபவித்துள்ள தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, சமீபத்திய நேர்காணலில் கலந்துகொண்டு, சினிமா உலகின் பின்னணியில் நடக்கும் சில கொடூரங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். அவருடைய உரையாடலில் இருந்து, சில வலிக்கத்தக்க அனுபவங்களும், துடிக்கவைக்கும் உண்மைகளும் வெளிவந்துள்ளன.
இந்நேர்காணலில் நடுவர், "ஒரு இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் ஒருவர், தனக்கு ஒரு பிரபல நடிகர் இரண்டு வருடமாக கதையை கேட்டு இழுத்தடித்து, பின்னர் தன்னுடைய படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக தெரிவித்தார். அது தற்பொழுது வைரலாகி வருகின்றது. அந்த நடிகர் யார் என்று தெரியுமா..?" எனக் கேட்டிருந்தார். அதற்குப் பாலாஜி பிரபு அந்த நடிகர் வேறுயாரும் இல்லை “SJ சூர்யா" தான் என்றார்.
இதுகுறித்து விளக்கமளித்த பாலாஜி பிரபு, “மிகவும் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. ஏனென்றால், SJ சூர்யாவுக்கு மக்கள் மனதில் ஒரு நல்ல பெயர் இருக்கிறது. ஆனா இது சினிமாவில் எல்லாரும் செய்கிற விஷயம்தான்” எனக் கூறினார்.
பலரும் SJ சூர்யா மீது நல்ல அபிப்பிராயம் கொண்டிருப்பது உண்மைதான். ஆனால் இது போன்ற ஒரு நடத்தை அவரிடம் இருந்ததனை யாரும் எதிர்பார்க்கவில்லை என்பதுதான் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உரையாடலில் பாலாஜி Assistant Directors பற்றியும் சிறப்பாகக் கூறியிருந்தார். அவர் தெரிவித்ததாவது, “Assistant Directorsஐ ஒரு சில இயக்குநர்களும், நடிகர்களும் வீட்டு வேலைக்காரர்களாக வைத்துக் கொள்வார்கள். சொந்த வீட்டு வேலை, பையனை பள்ளிக்கு விடுகின்ற வேலை, மளிகைக்கடைக்குப் போற வேலை என எல்லாம் அவர்களே செய்வாங்க.” என்றார்.
அத்துடன் சில தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள், Assistant Directorsன் கனவுகளையும் திறமைகளையும் மதிக்காமல் நடத்துவதையும் கண்டித்திருந்தார் பாலாஜி. அதுமட்டுமல்லாது, “சில Assistant Directors shootingல் பசியோடு கிடந்திருக்காங்க. நரம்புத்தளர்ச்சி வந்தவர்களும் இருக்காங்க. ஏனெனில் அவர்கள் சாப்பிடாமல் டீ மட்டும் தான் குடிச்சாங்க. அவங்களுக்கு எப்பவுமே சாப்பாடு கிடைக்காது.” எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும், சினிமாவில் Assistant Directorsகளுக்கு மரியாதை கொடுக்கும் கலாச்சாரம் KS ரவிக்குமார் மற்றும் ஷங்கர் ஆகிய இருவரும் வந்த பிறகு தான் கிடைத்தது எனவும் கூறியிருந்தார். பாலாஜி பிரபு அளித்த இந்த நேர்காணல், சினிமா உலகின் மறைமுக வாழ்க்கையைக் காட்சிப்படுத்தும் வகையில் காணப்பட்டது. சினிமா என்பது வெறும் கலை அல்ல; அது பலரது உயிர் மூச்சாக இருக்கின்றது என்பதனை உணர்த்தும் விதமாக வெளியான இந்தப் பேட்டி சினிமா உலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!