• May 24 2025

சுசித்திரா ஒழிஞ்சுகிட்டு கதையா பேசுறாங்க..! சும்மா போங்கப்பா..உண்மையை உடைத்த சகிலா..!

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா மற்றும் சமூக விவாதங்களில் தைரியமான கருத்துக்கள், நேர்த்தியான பதில்கள், சர்ச்சைக்கு உரிய நேரடிச் சொற்கள் மூலம் அடிக்கடி செய்திகளில் இடம்பிடிப்பவர் நடிகை சகிலா. சமீபத்தில் வெளியான ஒரு புதிய வீடியோவில், பல கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ரவிமோகன் – ஆர்த்தி விவகாரத்து குறித்து சுசித்திரா பகிர்ந்த புகைப்படக் குற்றச்சாட்டுக்கள், விஷால் உடல்நிலை மற்றும் சந்தானத்தின் அரசியல் தூண்டுதல்கள் என்பன குறித்து நேரடியாகத் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.


முதலில், ரவிமோகனுக்கும், அவரின் மனைவி ஆர்த்திக்கும் இடையிலான விவாகரத்து விவகாரம் குறித்து கேட்கப்பட்டபோது, சகிலா மிக நிதானமாக பதிலளித்தார்.“ரவியை எனக்கு தனிப்பட்ட முறையில் நன்றாகத் தெரியும். இப்போ இது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்குது… கோர்ட்டில வழக்கு நடந்து கொண்டிருக்குது. தீர்ப்பு வரட்டும். அவங்களே பாத்துப்பாங்க. இது அவர்களுக்குள்ள இருக்கிற family issue.” என்றார்.

அடுத்த கேள்வி இன்னும் கொஞ்சம் தீவிரமானதாக காணப்பட்டது. சமீபத்தில் சுசித்திரா, ஆர்த்தி மற்றும் ரவியின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தது குறித்து, “இது குற்றச்சாட்டு தானா?” என்ற கேள்வி எழுந்தது.


அதற்கு சகிலா,“அவங்க எங்கயோ போய் ஒழிஞ்சுகிட்டு, இப்போ பைத்தியக்காரி மாதிரி வந்து எல்லா விஷயத்தையும் கதைக்க ஆரம்பிச்சிருக்காங்க.” எனக் கடுமையாகப் பதிலளித்தார். மேலும் அவர், “ஒரு பெண், இன்னொரு பெண்ணை அதுவும் ஒரு குழந்தைக்குத் தாயான ஆர்த்தியை இப்படி எல்லாம் பழிப்பது, எந்த மனசாட்சியுள்ள பெண்ணும் செய்யமாட்டா.” எனவும் கூறியிருந்தார். 

அத்துடன் “சுசித்திராவை பிடிக்கிறவங்க அப்படியே இருங்க. ஆனா தயவு செய்து அவங்களை ‘encourage’ பண்ணாதீங்க.” என்றார். வீடியோவின் இடையே, நடிகர் விஷால் உடல்நிலை குறித்து எழுந்த கேள்விக்குப்  பதிலளித்த சகிலா, “அவருக்கு உடல்நடுக்கு, மயக்கம் போன்ற பிரச்சனைகள் வந்ததைப் பார்த்தேன். ஆனா அது குடிப்பதால வரேல. அது வயதினால வந்திருக்கலாம். அதற்காக அவரை விமர்சிக்க வேண்டியதில்லை” என்றார்.


இது ரசிகர்களுக்கான தெளிவான பதிலாகவும், விஷாலின் சார்பாக வலியுறுத்திய ஆதரவு போலவும் அமைந்தது. சமீபத்தில் வெளியாகிய தகவல்களில், காமெடி நடிகர் சந்தானம், 2026 தேர்தலில் உதயநிதிக்காக பிரச்சாரத்தில் ஈடுபடவிருக்கிறார் எனத் தெரியவந்துள்ளது. இது குறித்து கேட்கப்பட்டதற்கு, சகிலா மிக நேர்மையான பார்வையில் பதிலளித்தார். 

சகிலா அதன்போது, “அவர் ஒரு காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறினார். இப்போ அரசியலுக்கு வருகிறார் என்றால் அது நல்ல விஷயம் தான். ஜனநாயகத்தில் யாரும் வரலாம்.” என்றார். அது மட்டுமல்லாது, “எனக்கும் பெரிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் தயங்காது நடிப்பேன்." எனவும் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement