• Aug 17 2025

‘பெருசு’ படத்தின் ஹிந்தி ரீமேக் உறுதி...! ஹன்சல் மேத்தா இயக் இருப்பதாக தகவல்...!

Roshika / 3 hours ago

Advertisement

Listen News!

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் தயாரிப்பில், இளங்கோ ராம் இயக்கத்தில் உருவான ‘பெருசு’ திரைப்படம், மார்ச் 14, 2025 அன்று வெளியாகி கவனம் பெற்றது. வைபவ், சுனில் ரெட்டி, கருணாகரன், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, நிஹாரிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.


அடல்ட் காமெடி வகையைச் சேர்ந்த இந்த திரைப்படம், ஆரம்பத்தில் சர்ச்சைகளை எழுப்பியிருந்தாலும், இளம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம், சிங்கள மொழியில் வெளிவந்து வெற்றிப் பெற்ற ‘டென்டிகோ’ எனும் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

இந்நிலையில், பெருசு ஹிந்தியில் ரீமேக் ஆகும் எனக் கூறப்பட்ட செய்தி தற்போது அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தி சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஹன்சல் மேத்தா, பிரபல காஸ்டிங் டைரக்டர் முகேஷ் சாப்ரா உடன் இணைந்து, இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை பெற்றுள்ளனர்.


விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் இந்த ரீமேக்கை ஹன்சல் மேத்தா தானாகவே இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் இயக்கும் இந்த ரீமேக் மூலம், பெருசு படத்தின் கதையும், அதன் தனிச்சிறப்பும் நாட்டைத் தாண்டி மற்ற மொழிப்பேசும் பார்வையாளர்களுக்கும் விரைவில் கொண்டு செல்லப்பட உள்ளது.

Advertisement

Advertisement