• May 22 2025

’நாங்கள் பிரிந்துவிட்டோம்’: அதிகாரபூர்வமாக அறிவித்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து இருப்பதாகவும் இருவரும் இது குறித்து அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என்றும் கூறப்பட்டது. 

இந்த நிலையில் சற்றுமுன் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவரை பிரிந்து விட்டதாக அதிகார பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அடுத்து ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகியோர்களின் 11 வருட மண வாழ்க்கை முடிவுக்கு வருகிறது என்று குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து சைந்தவி தனது சமூக வலைதளத்தில் திருமணம் ஆன 11 ஆண்டுகளுக்குப் பிறகு நானும் ஜீவி பிரகாஷூம் பிரிய நீண்ட யோசனைக்கு பிறகு முடிவு செய்துள்ளோம். ஒருவரை ஒருவர் பரஸ்பர மரியாதையை பேணுவதன் மூலம் மன அமைதி முன்னேற்றத்திற்காக இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.

தயவுசெய்து ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் எங்கள் தனி உரிமை புரிந்து கொண்டு எங்களது இந்த கடினமான நேரத்தில் ஆதரவு அளிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர். இருவருமே ஒருவரை ஒருவர் பிரிவதாக தங்களது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் ஜிவி பிரகாஷ் சைந்தவி ஜோடி பிரிவது உறுதியாகியுள்ளது.







Advertisement

Advertisement