நடிகை நயன்தாராவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ஆவணப்படத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
முன்னதாக, 'நானும் ரவுடி தான்' திரைப்படத்தின் மூன்று நிமிட படப்பிடிப்பு காட்சிகள் இந்த ஆவணப்பட டிரெய்லரில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து, நடிகர் தனுஷின் 'வுண்டர்பார்ஸ்' நிறுவனம் ரூ.10 கோடி நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கின் விசாரணை தற்போது நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், தற்போது 'சந்திரமுகி' திரைப்படக் காட்சிகள் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறி, ஏபி இண்டர்நெஷனல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அவர்கள், இந்த காட்சிகளை ஆவணப்படத்தில் இருந்து நீக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
இந்த வழக்கில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் விசாரணையை அக்டோபர் 6ஆம் தேதி வரை தள்ளிவைத்துள்ளது. மீண்டும் மீண்டும் இருமுறை வழக்குகள் தொடரப்பட்டுள்ளதால், நயன்தாராவின் ஆவணப்படம் வெளியாகும் தேதி குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!