சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஸ்ருதி ஆரம்பிக்க இருக்கும் ரெஸ்டாரண்டிற்கு யாரை அழைப்பது? எப்படி பிரபலப்படுத்துவது? என்று குடும்பத்தாருடன் கதைத்துக் கொண்டுள்ளார். இதன் போது முத்து அப்பாவை அழைத்து ஆரம்பி, அப்போது உனது ரெஸ்டாரன்ட் இன்னும் பிரபலமாகும், அவர் ராசியானவர் என்று சொல்லுகின்றார்.
இதை தொடர்ந்து மீனா முத்துவிடம் க்ரிஷை சீதா வேலை பார்க்கும் ஹாஸ்பிடலில் கவுன்சிலிங் கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்லுகின்றார். இதனை ரோகிணியும் மறைந்திருந்து கேட்டு விடுகின்றார்.
அடுத்த நாள் க்ரிஷின் ஸ்கூலுக்கு வந்த பொலிஸார் க்ரிஷ் அடித்த மாணவனின் தந்தை பெரிய ஆள் என்றும், இதனால் க்ரிஷை சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்க வேண்டும் எனவும் ஸ்கூல் மாஸ்டர் உடன் பேசுகின்றார். மாஸ்டர் எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. இறுதியில் இதனை மகேஸ்வரிக்கு சொல்லுகின்றார்கள்.
இன்னொரு பக்கம் முத்து மீனாவும் க்ரிஷை டாக்டரிடம் அழைத்துச் செல்லும்போது அங்கு ரோகிணியும் வருகின்றார். இதன் போது என்ன நடந்தது என்று மீனா கேட்க, தனக்கு தலைவலி அதனால் தான் டாக்டரை பார்க்க வந்ததாக சொல்கின்றார் . மேலும் க்ரிஷிடம் டாக்டர் என்ன கேட்டாலும் என்னை பற்றி சொல்லக்கூடாது என சொல்லுகின்றார்.
இறுதியில் டாக்டரும் க்ரிஷ்க்கு பிரச்சினையாக இருப்பது அவருடைய அம்மா தான்.. ஆனால் அவருக்கு தீர்வும் அவருடைய அம்மா தான்.. அம்மாவின் அரவணைப்பில் இல்லாததால் தான் இப்படி இருக்கின்றார். அவங்களுடைய அம்மாவை க்ரிஷுடன் இருக்கச் சொல்லுங்கள் என சொல்லுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட் .
Listen News!