சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் , முத்துவும் மீனாவும் க்ரிஷை ஸ்கூலுக்கு அழைத்து வரும்போது, அங்கு வந்த மாஸ்டர் அவர்களிடம் நடந்தவற்றை சொல்லுகின்றார். மேலும் நீங்க இப்படியே க்ரிஷை கூட்டிக் கொண்டு சென்று விடுங்கள் இல்லை என்றால் க்ரிஷை போலீசார் பிடித்து விடுவார்கள் என எச்சரிக்கிறார்.
ஆனாலும் முத்து எத்தனை நாளைக்கு இப்படி இருப்பது, அவர்களுடன் பேசி முடிவு பண்ணலாம் என்று, போலீசாரிடம் க்ரிஷை அழைத்து செல்ல வேண்டாம் என கெஞ்சுகின்றார். ஆனாலும் அவர்கள் நாங்கள் ஒன்றும் பண்ண முடியாது.. கம்ப்ளைன்ட் கொடுத்த தந்தையிடம் சென்று பிரச்சனையை முடிக்க பாருங்கள் என்று ஒருநாள் டைம் கொடுக்கின்றார்கள்.
அதே நேரத்தில் க்ரிஷை இந்த விஷயத்தில் இருந்து மீட்பதற்காக வக்கீலை பார்க்கின்றார் ரோகிணி . மீனா க்ரிஷை அழைத்துக் கொண்டு மகேஸ்வரியின் வீட்டுக்கு செல்கின்றார். பின்பு அங்கேயே க்ரிஷை விட்டு விட்டு முத்துவுடன் கம்பளைண்ட் கொடுத்தவரின் வீட்டுக்கு செல்கின்றார்.
இன்னொரு பக்கம், மகேஸ்வரியின் வீட்டுக்கு வந்த வித்யா முத்து மீனாவும் இந்த விஷயத்தில் க்ரிஷை காப்பாற்றி விடுவார்கள். அதனால் நீ இதில் தலையிட்டு புதிய பிரச்சினையில் சிக்காதே என்று சொல்லுகின்றார். ஆனாலும் ரோகிணி முத்துவும் மீனாவும் முடியாவிட்டால் க்ரிஷை கைவிட்டு விடுவார்கள் என்று சொல்லுகின்றார். இதில் வித்யாவுக்கும் ரோகிணிக்கும் வாக்குவாதம் நடக்கின்றது.
இறுதியில் முத்து கம்ப்ளைன்ட் கொடுத்தவரின் வீட்டுக்குச் சென்று பேச, அவர் தனது முடிவில் இருந்து மாறவில்லை. இதனால் முத்து அவருடைய காலில் விழுந்து கெஞ்சுகின்றார். ஆனாலும் தப்பு செஞ்சவன் தண்டனையை அனுபவிக்க தான் வேண்டும் என்று முகத்தில் அடித்தால் போல் கதவை சாத்திவிட்டு சென்று விடுகின்றார்.
எனினும், ஒரு முடிவு காணாமல் இங்கிருந்து செல்வதில்லை என முத்துவும் மீனாவும் அங்கேயே இருக்கிறார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!