• Sep 10 2025

இந்திய ஸ்பைடர் மேனாக களமிறங்கும் தனுஷ்; வெளியான சுவாரஸ்ய தகவல்

Aathira / 8 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில்  நடிகராக, இயக்குநராக, பாடகராக, தயாரிப்பாளராக  பன்முகம் கொண்டு திகழ்பவர் தனுஷ்.  இவருடைய நடிப்பில் இறுதியாக  குபேரா திரைப்படம் வெளியானது.  இதில் நாகார்ஜுனா, ராஷ்மிகா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் இயக்கியிருந்தார்.

இதை தொடர்ந்து தற்போது  தனுஷ் இயக்கி நடிக்கும் திரைப்படம் தான் இட்லி கடை.  இந்த படத்தில்  நித்யா மேனன்,  சத்யராஜ், அருண் விஜய், ராஜ்கிரன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில்  நடித்துள்ளனர்.  இந்த படம் அக்டோபர் முதலாம் தேதி வெளியாக  உள்ளது. 

தற்போது விக்னேஷ் ராஜா இயக்கி வரும் படத்தில் தனுஷ் கவனம் செலுத்தி வருகின்றார்.  இதன் படப்பிடிப்பு ராமநாதபுரத்தில் நடைபெற்று வருவதாகவும், இதனை முடித்துவிட்டு அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ள படத்தில் நடிப்பதற்கும் தனுஷ் திட்டமிட்டுள்ளார். 


இந்த நிலையில், ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் அடுத்த ஆண்டு உலகின் மிகப் பிரமாண்டமான திரைப்படமாக வெளியாக இருக்கும் 'அவெஞ்சர்ஸ் சீக்ரெட் வார்ஸ்' படத்தில் நடிகர் தனுஷ் இந்தியன் ஸ்பைடர் மேன் ஆக நடிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக ரூசோ பிரதர்ஸ் தெரிவித்துள்ளனர்.  இந்த தகவல் தற்போது வெளியாகி  தனுஷ் ரசிகர்களை  இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.



 

Advertisement

Advertisement