தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் இசையமைப்பாளராக, இயக்குநராக, தயாரிப்பாளராக பன்முகம் கொண்டு திகழ்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான ரோமியோ, ஹிட்லர், மழை பிடிக்காத மனிதன் போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
சமீபத்தில் வெளியான மார்க்கன் படமும் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதை அடுத்து பிச்சைக்காரன் படத்தின் மூன்றாவது பாகத்தை இயக்கி நடிக்க உள்ளதாக விஜய் ஆண்டனி பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.
மேலும், விஜய் ஆண்டனியின் 25 ஆவது படமாக சக்தி திருமகன் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். இதனை அருண் பிரபு எழுதி இயக்குகின்றார். இந்த படத்திற்கும் விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார்.
விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படம் அரசியல் கதைக்களத்துடன் அமைந்துள்ளதோடு இதில் விஜய் ஆண்டனி கேங்ஸ்டர் ஆக நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சக்தி திருமகன் படத்தில் டிரெய்லர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த படம் எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!