தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கூலி’ படம் உலகம் முழுவதும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி வெளியான இப்படம், சில நாட்களிலேயே 400 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி சாதனை படைத்திருந்தது.
அதிரடியான ஆக்ஷன், இசை மற்றும் ரஜினியின் மாஸான தோற்றம் ஆகியவை படத்தை வெற்றியின் உச்சிக்கு கொண்டுசென்றன. இந்நிலையில், சிங்கப்பூரில் படம் தணிக்கை சிக்கலுக்குள் சிக்கி, அதில் உள்ள 4 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனையடுத்து, படக்குழுவுடன் கலந்தாலோசித்து, அந்த 4 நிமிட காட்சிகள் தனிப்பட்ட முறையில் மறுசீரமைக்கப்பட்டு நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் படி, 13 வயதுக்குட்பட்டவர்கள் பெற்றோர் அனுமதியுடன் மட்டும் படம் பார்ப்பதற்கான வழிகாட்டி அளிக்கப்பட்டுள்ளது.
Listen News!