தெலுங்குத் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை உயர்த்தி வருகிறார். கடந்த காலக்கட்டத்தில் வெளியான ‘வால்டர் வீரய்யா’ திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றது.
இந்நிலையில், சிரஞ்சீவியின் 156-வது திரைப்படமாக உருவாகும் படம் ‘விஸ்வம்பரா’. பேன்டஸி ஜானரில் உருவாகும் இப்படத்தை ‘பிம்பிஸாரா’ புகழ் மல்லிடி வசிஷ்டா இயக்குகிறார். இப்படத்தில் சிரஞ்சீவிக்கு இணையாக திரிஷா, மிருணால் தாகுர் மற்றும் அஷிகா ரங்கநாத் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பு பொறுப்பேற்றுள்ளது. இசை மேதை எம்.எம். கீரவாணி இசையமைக்க, புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் சோட்டா கே. நாயுடு ஒளிப்பதிவை கையாள்கிறார்.
இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியான நிலையில், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இப்படத்தின் 'மெகா பிளாஸ்ட்' அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இது படத்தின் ரிலீஸ் தேதியைத் தெரிவிக்கும் முக்கிய அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!