• Sep 04 2025

"வார் 2" படத்தின் ட்ரெய்லர் எப்போது தெரியுமா? படக்குழுவின் தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பாலிவுட் பாக்ஸ் ஆபிஸை பதறவைக்கும் வகையில் 2019-ல் வெளியான ஹ்ரித்திக் ரோஷன் – டைகர் ஷ்ராஃப் நடித்த ‘வார்’ (War) திரைப்படம், மிகப்பெரிய வெற்றியையும், வசூலையும் பெற்றதோடு, ரசிகர்களிடம் சிறப்பான Action Franchise-ஆகவும் உருவாகியது.


அந்தப் படத்தை தொடர்ந்து வரவிருக்கும் ‘வார் 2’ படத்தின் ட்ரெய்லர் தற்போது அதிகாரபூர்வமாக ஜூலை 25, 2025 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஹ்ரித்திக் ரோஷனுடன் இணைந்து தென்னிந்திய சினிமாவின் மாஸ் ஹீரோ, ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடிக்கிறார் என்பதால், ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


ஜூலை 25-ம் தேதி வெளியாகும் ட்ரெய்லரில், இவர்கள் இருவரும் ஒரே ஃப்ரேமில் தோன்றும் முக்கியமான காட்சிகள், விறுவிறுப்பான ஆக்ஷன் சீன்கள், மற்றும் punch dialogue-கள் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Advertisement

Advertisement