லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் நாளை உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஆமிர்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
பட வெளியீட்டை முன்னிட்டு, ரஜினிகாந்த் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். மேளதாளம், பட்டாசு உள்ளிட்ட கொண்டாட்ட ஏற்பாடுகள் பல இடங்களில் நடைபெறுகின்றன. முன்பதிவு டிக்கெட்டுகள் அசுர வேகத்தில் விற்றுத் தீர்ந்து வருகின்றன.
ஆனால், ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவலும் வெளிவந்துள்ளது. தமிழகத்தின் சில இடங்களில், “கூலி” பட டிக்கெட்டுகள் ரூ.3000 வரை விற்கப்படுவதாகவும், போலி டிக்கெட்டுகள் பரவலாக விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து, ரசிகர்கள் மோசடிக்கு ஆளாகாமல் இருக்க அதிகாரப்பூர்வமாக டிக்கெட்டுகள் வாங்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் எச்சரித்து வருகின்றனர்.
Listen News!