• Jul 18 2025

கூலி படத்தில் சுருதிகாசனிற்கு லோகேஷ் வைத்த டுவிஸ்ட்..! என்ன தெரியுமா..?

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ,சுருதிகாசன் ,சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் "கூலி " இந்த படத்தில் நடிகை சுருதிகாசன் ரஜினிக்கு ஜோடியாக இல்லை மகளாக நடிக்க இருக்கின்றார் எனும் செய்தி அதிகம் வைரலாகி வந்தது. ஆனால் தற்போது வெளியாகிய தகவலின் படி இயக்குநர் பெரிய டுவிஸ்ட் ஒன்று வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது.


அதாவது இவர் ரஜினியின் மகள் இல்லையாம் சத்யராஜின் மகளாக நடித்து வருகின்றார். இது மட்டுமல்லாமல் படத்தின் climax இல் ஸ்ருதிகாசனிற்கு பெரிய ஒரு டுவிஸ்ட் வைத்து முடித்து இருப்பதாக தெரியவந்துள்ளது. இது குறித்து ஒரு சிலர் சுருதி சத்திராஜின் மகள் இல்லை ரஜினியின் மகள் தான் சத்யராஜ் எடுத்து வளர்த்தார் என முடித்துள்ளார் எனவும் ஒரு சிலர் சுருதி இறப்பது போன்று காட்டியுள்ளாரா என்றும் கூறி வருகின்றனர்.


மேலும் இந்த படம் கலாநிதி மாறன் தயாரிப்பில் வரும் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாகவும் படம் 350 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement