• Jun 28 2025

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த திரைப்படம் விரைவில்...! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..

Mathumitha / 2 weeks ago

Advertisement

Listen News!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் கீர்த்தி ஷெட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் LIK திரைப்படம் நீண்ட நாட்களாக உருவாகி வரும் ஒரு எதிர்பார்ப்பு மிகுந்த படம். தற்போது இப்படத்தின் CG (Computer Graphics) பணிகள் தீவிரமாக தொடங்கியுள்ளன. 


அதனுடன் அடுத்த வாரம் ரீரெக்கார்டிங் பணிகளும் துவங்க உள்ளதாக படக்குழு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.தனது மற்ற பணிகளை ஒதுக்கி விட்டு விக்னேஷ் சிவன் இந்த படத்தில் முழுமையாக ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 


படம் தரமாக அமைய பல தொழில்நுட்ப கலைஞர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர். LIK திரைப்படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாவது உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் இதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement