இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீண்டும் வித்தியாசமான ஒரு கதையுடன் திரும்பி வருகிறார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘கூலி’ திரைப்படம் தற்போது தமிழ் திரையுலகத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
படத்தின் ட்ரெய்லர், டீசர், மற்றும் போஸ்டர்கள் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன. இதற்கிடையில் தற்போது வெளியாகி பரவலாக பேசப்படும் விடயமாக படத்தில் இடம்பெற்ற ‘மோனிகா’ என்ற பாட்டும், அதில் டான்ஸ் ஆடிய பூஜா ஹெக்டேயின் ஆடையும் காணப்படுகிறது.
'கூலி' படத்தில் இடம்பெறும் 'மோனிகா' என்ற பாடல், ரிலீஸான முதல் நாளே YouTube-ல் ட்ரெண்டிங் லிஸ்டில் இடம்பிடித்தது. இப்பாடலில் தனித்துவமாக காணப்பட்டது பூஜா ஹெக்டேயின் ஆடை தான். அந்த அடையின் விலை தற்பொழுது வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்தவகையில் பூஜா ஹெக்டே அணிந்துள்ள ஆடை 5லட் சம் என சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Listen News!