• Aug 02 2025

சரிகமப மேடையை கண்கலங்க வைத்த தேவயானி குடும்பம்... ரசிகர்களை நெகிழவைத்த Promo.!

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சி உலகத்தில் இசை, உணர்ச்சி, மற்றும் குடும்ப பாசத்தின் கலவையால் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ள நிகழ்ச்சியாக திகழ்கிறது ஜீ தமிழ் சேனலின் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோ சரிகமப. கடந்த சில ஆண்டுகளில், ரசிகர்களிடம் நல்ல இடத்தைப் பிடித்திருக்கிறது இந்த நிகழ்ச்சி.


அந்த வகையில், தற்போது ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீசன் 5-ல், ஒரு சிறப்பு கவனம் பெறுபவர் நடிகை தேவயானியின் மகள் இனியா. சிறுவயதிலிருந்து இசையில் ஈடுபாட்டுடன் பங்கேற்கும் இனியா, தனது குரலால் மட்டுமல்லாது, மேடையில் வெளிப்படுத்தும் மரியாதை, பணிவு, மற்றும் பாச உணர்வுகளால் கூட ரசிகர்களை கவர்ந்துள்ளார்.


சமீபத்தில் வெளியாகியுள்ள promo வீடியோவில், இனியா தனது தந்தையை நிகழ்ச்சிக்குள் வரவேற்கும் ஒரு அழகான நிகழ்வு இடம்பெற்றுள்ளது. மேடையில் தந்தைக்காக ஒரு பாடலை டெடிகேட் செய்யும் அந்த நிமிடங்கள், பார்த்த ஒவ்வொருவரையும் உணர்வுபூர்வமான புன்னகையுடன் அழ வைத்திருக்கிறது.


இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இனியாவின் தந்தை, மேடையில் நின்றபோது தனது மகளைப் பார்த்தவுடன், மகிழ்ச்சியால் கலங்கிய குரலில், “இனியா இப்படி ஒரு பெரிய மேடையில் நின்று பாடும் போது, நம்முடைய வாழ்க்கையில் நாம ஏதோ சாதனையை செய்துவிட்டோம்னு ஒரு பீல் வருது.

ஆனா இந்த சாதனையின் பின்னால என்னுடைய உழைப்பு எதுவுமே இல்ல… இது முழுக்க முழுக்க என் மனைவி தேவயானி தான் செய்தது.” என்றார். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement