• Apr 17 2026

ஆறாவது நாளில் மொத்தமாக சரிந்த கேப்டன் மில்லர்! நம்ப முடியாத வசூல் விபரம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 'கேப்டன் மில்லர்'. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படத்தினை பெரும் பொருட் செலவில் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இயக்குநர் அருண்மாதேஷ் இயக்கத்தில் உருவான கேப்டன் மில்லர் படமானது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி பட்டையை கிளப்பி வருகின்றது.

இந்த நிலையில், கேப்டன் மில்லர் படத்தின் 6வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றிய விபரம் வெளியாகியுள்ளது.


அதன்படி, முதல் நாளில் 8.7 கோடி ரூபாய் வசூல் செய்திருந்த கேப்டன் மில்லர், இரண்டாவது நாளில் 7.45 கோடி, மூன்றாவது நாளில் 7.25 கோடி , 4வது நாளில் 6.60 கோடியும் ஐந்தாவது நாளில் 4.80 கோடி ரூபாயும் கலெக்‌ஷன் செய்திருந்தது. 

எனினும், ஆறாவது நாளில் 3 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாம் கேப்டன் மில்லர். 

அதனடிப்படையில் மொத்தம் 6 நாட்களில் 38 முதல் 40 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. ஆனால் இதுபற்றி படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement