இந்திய இசைத்துறையில் மாற்றத்தைக் கொண்டு வந்த நவீன கலைஞராகத் திகழ்கிறார் ஏ.ஆர். ரகுமான். அத்தகைய கலைஞர் தற்பொழுது உலக தரமான ஸ்டூடியோ ஒன்றை திறந்துள்ளார். இந்த ஸ்டூடியோ தற்போது சினிமா மற்றும் இசைத்துறையைச் சேர்ந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
இந்நிலையில், இந்திய அரசின் இணை அமைச்சர் எல். முருகன், நேற்று ஏ.ஆர். ரகுமானை சந்தித்தார். இந்த சந்திப்பு தொடர்பாக பல வதந்திகள், அரசியல் கோணங்களில் யூகங்கள் சமூக ஊடகங்களில் பரவி வந்தன.
இவ்வாறான சந்திப்பின் பின்னணியை விளக்கும் வகையில், எல். முருகன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருந்தார். அதன்போது, “ஏ.ஆர். ரகுமான் அவர்கள் உலக தரம் வாய்ந்த ஸ்டூடியோவை உருவாக்கியிருக்கிறார். அதன் வசதிகள், ஒலி அமைப்புகள், தொழில்நுட்ப ரீதியான ஒழுங்குகள் அனைத்தும் மிகவும் உயர்தரமானவை. அவருடைய ஸ்டூடியோவை பார்வையிட சென்றபோது, அவர் அங்கு இருந்தார். அதனால் தான் அந்த சந்திப்பு நடந்தது." எனத் தெரிவித்தார். இந்த தகவல்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றன.
Listen News!