பவன்கல்யாணின் திரைப்படம் ‘ஹரி ஹர வீர மல்லு’வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை நிதி அகர்வால், சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு ஆந்திர அரசு வாகனத்தை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளனர். “தனியார் நிகழ்ச்சிக்கு அரசு வாகனம் பயன்படுத்துவது எப்படி? இது அதிகாரத் தவறா?” என பலரும் கேள்வி எழுப்பினர். குறுகிய நேரத்திலேயே இந்த விவகாரம் வைரலாக பரவி வந்தது.
இதற்குப் பதிலளித்த நிதி அகர்வால், செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார் ."அது நான் செய்யவில்லை. அந்த நிகழ்ச்சியை நடத்தியவர்கள் தான் வாகன ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். நான் அந்த விவரங்களை அறியவில்லை," எனத் தெரிவித்தார்.
மேலும், “நான் எந்த விதமான சட்டவிரோதமான செயலிலும் ஈடுபடவில்லை. எனது வேலைக்கு வந்தேன், நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அதன் பிறகு தான் இந்த விவகாரம் பற்றி தெரிந்தது,” என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், நிகழ்ச்சியை நடத்திய நிறுவனத்திடம் அரசு விசாரணை நடத்தும் வாய்ப்புகள் உள்ளன.இந்த விவகாரம் அரசியல் நோக்கில் பயன்பாட்டுக்குள்ளாகும் முன்பே, நிதி அளித்த இந்த விளக்கம் விவகாரத்துக்கு புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!