முன்னாள் தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து உடல்நலக்குறைவால் இன்று காலமானார். தற்காலிகமாக அவரது உடல் ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் இருந்து கோபாலபுரம் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், மற்றும் பொதுமக்கள் , திரைத்துறையினர் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மு.க. முத்துவின் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெறுகிறது. பின்னர் அவரது உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது மறைவுக்கு தமிழக அரசியல்வாதிகள், திரையுலகப் பிரமுகர்கள், மற்றும் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரபல நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம், கோபாலபுரம் இல்லத்திற்கு நேரில் சென்று மு.க. முத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இது இரு குடும்பங்களுக்கிடையேயான நெருங்கிய உறவை பிரதிபலிக்கிறது. குறிப்பாக, விக்ரத்தின் மகள் அக்ஷிதா, மு.க. முத்துவின் பேரனான மனு ரஞ்சித்தை திருமணம் செய்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.க. முத்து ஒரு காலத்தில் தமிழ் சினிமாவிலும் செயற்பட்டு இருந்தவர். அவரது மறைவு, கருணாநிதி குடும்பத்திற்கும், திமுகவிற்கும் பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது. அவரது ஆன்மா சாந்தியடைய இந்நேரத்தில் மக்கள் அனைவரும் பிராத்திக்கின்றனர்.
Listen News!