தமிழ் சினிமாவில் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகர் விக்னேஷ். அதிகளவான படங்களில் கதாநாயகனாக நடித்த விக்னேஷ், ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி, சொந்த ஊருக்குச் சென்று தொழில் பார்த்து வந்தார்.
இந்த நிலையில், பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரைக்கு புதிய பறவையாக திரும்பியிருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில், தனது புதிய படமான ‘ரெட் பிளவர்’குறித்தும் அந்தப் படத்தின் பின்னணி அனுபவங்களைப் பற்றிய விளக்கத்துடன் அவர் பகிர்ந்த தகவல்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்ச்சியில் பேசும்போது விக்னேஷ், "30 ஆண்டுகளாக சினிமா துறையில் இருக்கிறேன். இடையில் சில தனிப்பட்ட காரணங்களால் சினிமாவில் இருந்து ஓய்வெடுத்தேன். பின் என்னுடைய சொந்த ஊருக்கு சென்று என் தொழிலை கவனித்தேன்.
இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளேன். இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் என்னிடம் சொன்ன "ரெட் பிளவர்" கதையைக் கேட்டு வியந்தேன். அப்போது ஆண்ட்ரூ இந்தக் கதை விஜய்க்கு எழுதியது. அவர் அரசியலுக்கு சென்று விட்டதால் உங்களை வைத்து எடுக்க முடிவு செய்திருக்கிறோம் என்று கூறினார். அதற்கு பிறகே இப்படத்தில் நடிக்க நான் ஒப்புக் கொண்டேன்." என நடிகர் விக்னேஷ் கூறியுள்ளார்.
Listen News!